சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர், ஏட்டு ஆயுதப்படைக்கு மாற்றம்
சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர், ஏட்டு ஆயுதப்படைக்கு மாற்றம்
மதுபான கடத்தலுக்கு உடந்ைதயாக இருந்த சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், ஏட்டு ஆகிய இருவரையும் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் உத்தரவிட்டார்.
சோதனை
நாகை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக புதுச்சேரி மாநில மதுபானங்கள் விற்பனை மற்றும் கடத்தல் அதிக அளவில் நடந்து வந்தது. இதனை கண்காணித்து தடுக்க நாகை மாவட்டத்தில் 8 இடங்களில் தற்காலிக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு போலீசார் சோதனை செய்து வருகின்றனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து இரு சக்கர வாகனத்தில் மதுபானங்கள் கடத்தி சென்ற நபரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர், ஏட்டு உடந்தை
கைதானவர்களிடம் நடத்திய விசாரணையில் நாகூர் சோதனை சாவடியில் பணியில் இருந்த சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ், ஏட்டு குணசேகரன் ஆகிய இருவரும் செல்போன் மூலம் மது கடத்தலில் ஈடுபட்டவர்களிடம் தொடர்பு கொண்டு மதுகடத்தலுக்கு உடந்தையாக இருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து மதுபான கடத்தலுக்கு உடந்தையாக இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ், ஏட்டு குணசேகரன் ஆகிய இருவரையும் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் நேற்று உத்தரவிட்டார்.
----------