திருநங்கைகள் குறைதீர்க்கும் கூட்டம்
தேனி கலெக்டர் அலுவலகத்தில் திருநங்கைகள் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடக்கிறது.
தேனி
தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தேனி மாவட்டத்தில் உள்ள திருநங்கைகளின் குறைகளை நிவர்த்தி செய்திட ஏதுவாக மாதந்தோறும் முதல் வார வெள்ளிக்கிழமையில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்பட உள்ளது. அதன்படி, நாளை (வெள்ளிக்கிழமை) தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திருநங்கைகளுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது. இதில் தேனி மாவட்டத்தை சேர்ந்த திருநங்கைகள் கலந்துகொண்டு குறைகளை தெரிவிக்கலாம். முகாமில், திருநங்கைகளுக்கான அடையாள அட்டை, ரேஷன் கார்டு, மருத்துவ காப்பீடு அட்டை இல்லாதவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், முகாமில் திருநங்கைகளின் குறைகள் நிவர்த்தி செய்யப்படுவதோடு, நலத்திட்ட உதவிகள் பற்றியும் எடுத்துரைக்கப்படவுள்ளது. இந்த முகாமை திருநங்கைகள் பயன்படுத்தி பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story