மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம்


மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம்
x

மாதாந்திர உதவித்தொகையை உயர்த்தி வழங்க கோரி சேலத்தில் மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

சேலம்

மாதாந்திர உதவித்தொகையை உயர்த்தி வழங்க கோரி சேலத்தில் மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

காத்திருப்பு போராட்டம்

சேலம் மாவட்ட காதுகேளாதோர் பொதுநல முன்னேற்ற சங்கம் சார்பில் கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. மாநில பொதுச்செயலாளர் அருண்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் பிரபு, துணைத்தலைவர் காளித் சான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அரசு, தனியார் வேலைவாய்ப்பில் 1 சதவீதம் வேலை வழங்க வேண்டும், வறுமை கோட்டின் கீழ் உள்ளவர்களுக்கு தொகுப்பு வீடு வழங்க வேண்டும், மாதாந்திர உதவித்தொகையை ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும், வாரிசு அடிப்படையில் காதுகேளாத மாற்றுத்திறனாளிகளுக்கு பணி நியமனம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.

ஆவின் பாலகம்

இதில் கலந்து கொண்டவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு ஆவின் பாலகம் அமைத்து கொடுக்க வேண்டும், எங்களின் சைகை மொழியை விரைந்து அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை வாசகங்கள் அடங்கிய அட்டைகளை கைகளில் ஏந்தி நின்றனர். போராட்டத்தில் சங்கத்தின் துணை செயலாளர் அயூப், பொருளாளர் பாட்ஷா உள்பட ஏராளமான மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். அதைத்தொடர்ந்து சங்க நிர்வாகிகள் கோரிக்கை அடங்கிய மனுவை கலெக்டர் அலுவலக அதிகாரிகளிடம் வழங்கினர்.


Next Story