விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழகமேலாண்மை இயக்குனர் நியமனம்
விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழக மேலாண்மை இயக்குனராக எஸ்.எஸ்.ராஜ்மோகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
விழுப்புரம்
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக விழுப்புரம் கோட்ட மேலாண்மை இயக்குனராக பணியாற்றி வந்த ஜோசப்டயஸ் கோயம்புத்தூருக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக கும்பகோணம் அரசு போக்குவரத்துக்கழக மேலாண்மை இயக்குனராக பணியாற்றி வந்த விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழக மேலாண்மை இயக்குனராக நியமிக்கப்பட்டார். இவர் நேற்று காலை விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழக தலைமை அலுவலகத்தில் மேலாண்மை இயக்குனராக பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.
Related Tags :
Next Story