போக்குவரத்து கழக பணியாளர்கள், ஓய்வுபெற்றவர்கள் ஆர்ப்பாட்டம்
போக்குவரத்து கழக பணியாளர்கள், ஓய்வுபெற்றவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
போக்குவரத்து கழக பணியாளர்கள், ஓய்வுபெற்றவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலூர் அலமேலுமங்காபுரத்தில் உள்ள போக்குவரத்து கழக வேலூர் மண்டல அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணியாளர்கள் சம்மேளனம் மற்றும் ஓய்வு பெற்ற பணியாளர் சம்மேளனம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பணியாளர்கள் சம்மேளன வேலூர் மண்டல பொது செயலாளர் தமிழ்செல்வன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் சக்கரவர்த்தி, சாந்தசீலன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மாநில அமைப்பு செயலாளர் மோகன் வாழ்த்தி பேசினார்.
சிறப்பு விருந்தினராக பணியாளர்கள் சங்க மாநில பொதுச் செயலாளர் பத்மநாபன் கலந்து கொண்டு கோரிக்கைள் குறித்து விளக்கி பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில், 2003-க்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஓய்வு பெற்றவர்களுக்கு அகவிலைப்படி நிலுவை தொகையை வழங்க வேண்டும். மருத்துவ காப்பீடு, மருத்துவபடி வழங்க வேண்டும். காலிபணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். முடிவில் ஓய்வு பெற்ற சம்மேளன வேலூர் மண்டல பொது செயலாளர் மணி நன்றி கூறினார்.