நாகையில் போக்குவரத்து தொழிலாளர்கள் தர்ணா
ஒப்பந்த தொழிலாளர்கள் பணியமர்த்தப்படுவதை கண்டித்து நாகையில் போக்குவரத்து தொழிலாளர்கள் தர்ணா
நாகப்பட்டினம்
நாகை அரசு விரைவு போக்குவரத்து அலுவலகம் முன்பு போக்குவரத்து தொழிலாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு பணிமனை தலைவர் சண்முக சுந்தரம் தலைமை தாங்கினார். மத்திய சங்க துணை செயலாளர் சரவணன் முன்னிலை வகித்தார். நாகை மண்டல பொதுச்செயலாளர் ராஜேந்திரன், நாகை தொழிற்சங்க கூட்டமைப்பு செயலாளர் சிவக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார். போக்குவரத்து துறையில் ஒப்பந்த தொழிலாளர்களை பணியமர்த்துவதை கைவிட வேண்டும். வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் பணி வழங்க வேண்டும். தொழிற்சாலை சட்ட திருத்தம் என்ற பெயரில் வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்த கூடாது. போக்குவரத்து துறையை தனியார் மயமாக்க கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்களை எழுப்பினர்.
Related Tags :
Next Story