போக்குவரத்துக் கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி, நாகையில் போக்கு வரத்துக்கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகப்பட்டினம்:
கோரிக்கைகளை வலியுறுத்தி, நாகையில் போக்கு வரத்துக்கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
கண்டக்டர் இல்லாமல் பஸ்களை இயக்க அறிவுறுத்தும் அரசு விரைவு போக்குவரத்து கழகத்தை கண்டித்து நாகை அரசு விரைவு போக்குவரத்து பணிமனை முன்பு சி.ஐ.டி.யூ. போக்குவரத்து ஊழியர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்துக்கு பணிமனை தலைவர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் கண்ணன் முன்னிலை வகித்தார்.மாவட்ட தலைவர் தங்கமணி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.
கோரிக்கைகள்
இதில், அரசு போக்குவரத்து கழக தலைவர் அருள்தாஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
போக்குவரத்து கழகத்தில் காலியாக உள்ள 2 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப வேண்டும். கண்டக்டர்கள் இன்றி பஸ்களை இயக்க அறிவுறுத்தி தொழிலாளி மற்றும் பயணிகள் உயிரோடு விளையாடும் போக்கை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.