போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x

போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருநெல்வேலி

நெல்லை வண்ணார்பேட்டை அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனை முன்பு சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம் சார்பில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரசு போக்குவரத்து கழக தாமிரபரணி பணிமனை கிளை மேலாளரிடம் தொழிலாளர் பிரச்சினைகள் குறித்து பேச சென்ற நெல்லை மண்டல நிர்வாகிகளை தொ.மு.ச. சங்க நிர்வாகி மற்றும் அதிகாரி ஆகியோர் சேர்ந்து தாக்கியதாக கூறி அதை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அரசு விரைவு போக்குவரத்து கழக மத்திய சங்க செயலாளர் அருண் தலைமை தாங்கினார். நெல்லை மண்டல பொதுச் செயலாளர் ஜோதி தொடங்கி வைத்து பேசினார். சி.ஐ.டி.யு. மாநில குழு உறுப்பினர் பெருமாள், மத்திய சங்க துணை செயலாளர் சுந்தர் சிங் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதில் நெல்லை மாவட்ட போக்குவரத்து தொழிலாளர் சங்க தலைவர் காமராஜ் மற்றும் நிர்வாகிகள் சண்முகராஜ், கண்ணன், டேவிட், சங்கரநாராயணன் முருகன், சண்முகம், சங்கர் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கிடையே அரசு போக்குவரத்து கழக பணிமனையில் நடைபெற்ற பிரச்சினை தொடர்பாக வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து பாளையங்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story