போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 20 Oct 2022 12:15 AM IST (Updated: 20 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

தீபாவளி போனஸ் வழங்க கோரி போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நீலகிரி

கோத்தகிரி,

20 சதவீத தீபாவளி போனஸ் வழங்கக்கோரி அரசு போக்குவரத்துக்கழக சிஐடியு தொழிற் சங்கத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 20 சதவீத தீபாவளி போனஸ் வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோத்தகிரி போக்குவரத்து கழக பணிமனை முன்பு சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு நீலகிரி மண்டல தலைவர் சாமிநாதன் தலைமை தாங்கினார். ஆர்பாட்டத்தில் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 20 சதவீத தீபாவளி போனஸ் தொகை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதில் தொழிற்சங்க உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.


Next Story