போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
புதுக்கோட்டை
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை கண்டித்தும், அவரை மத்திய அரசு திரும்பப்பெற வலியுறுத்தியும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் (சி.ஐ.டி.யு.) சார்பில் புதுக்கோட்டையில் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் பதுக்கோட்டை மண்டல பொதுச்செயலாளர் மணிமாறன் தலைமை தாங்கினார். கோரிக்கைகளை விளக்கி சி.ஐ.டி.யு. மாநில செயலாளர் ஸ்ரீதர், மாவட்ட தலைவர் முகமதலிஜின்னா உள்ளிட்டோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தை சேர்ந்த போக்குவரத்து ஊழியர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகள் தொடர்பான கோஷங்களை எழுப்பினர்.
Related Tags :
Next Story