போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 22 Feb 2023 12:30 AM IST (Updated: 22 Feb 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல்லில் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல்

சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் டிரைவர்கள் நியமிக்கப்பட இருப்பதற்கு சி.ஐ.டி.யூ. போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதையொட்டி நேற்று மாநிலம் முழுவதும் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி திண்டுக்கல் நாகல்நகரில் உள்ள பணிமனை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு சி.ஐ.டி.யூ. போக்குவரத்து தொழிற்சங்கத்தின் கிளை செயலாளர் தனபாலன் தலைமை தாங்கினார்.

இதில் மத்திய சங்க செயலாளர் ஜெயக்குமார், பொதுச்செயலாளர் ராமநாதன் உள்ளிட்ட நிர்வாகிகள், போக்குவரத்து தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது அரசு போக்குவரத்து கழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் டிரைவர், கண்டக்டர்களை நியமிக்க கூடாது. மேலும் அரசு போக்குவரத்து கழகத்தில் தேவையான பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று வலியுறுத்தி கோஷமிட்டனர். இதேபோல் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 9 பணிமனை முன்பும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


Next Story