போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x

நெல்லையில் போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

திருநெல்வேலி

நெல்லை வண்ணார்பேட்டை அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு சி.ஐ.டி.யு. போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை தண்டோரா அடித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மண்டல தலைவர் காமராஜ் தலைமை தாங்கினார். சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்க பொது செயலாளர் மரியஜான் ரோஸ் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். கோரிக்கைகளை விளக்கி தென்காசி ஆட்டோ சங்க மாவட்ட செயலாளர் வன்னியபெருமாள், சி.ஐ.டி.யு. அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்க துணை பொது செயலாளர் பாலசுப்ரமணியன், துணை தலைவர் மணி ஆகியோர் பேசினர். மண்டல பொதுச்செயலாளர் ஜோதி நிறைவுைரயாற்றினார்.


Next Story