கிராவல் மண் கடத்தல்; டிப்பர் லாரி பறிமுதல்
ஆலடி அருகே கிராவல் மண் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
கடலூர்
ஆலடி,
கடலூர் மாவட்ட புள்ளியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குனர் ரமேஷ்குமார் தலைமையிலான அதிகாரிகள் ஆலடி அடுத்த இருளக்குறிச்சி மெயின் ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த டிப்பர் லாரியை அதிகாரிகள் தடுத்து நிறுத்த முயன்றனர். அதிகாரிகளை பார்த்ததும் டிரைவர் லாரியை சற்று முன்னதாகவே நிறுத்திட்டு, இறங்கி தப்பியோடிவிட்டார். இதனால் சந்தேகமடைந்த அதிகாாிகள் லாரியை சோதனையிட்டபோது, அதில் கிராவல் மண் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து அதிகாரிகள் கிராவல் மண் கடத்த பயன்படுத்தப்பட்ட டிப்பர் லாரியை பறிமுதல் செய்ததுடன், இதுபற்றி ஆலடி போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய லாரி டிரைவர் பாலக்கொல்லை கிராமத்தை சேர்ந்த ராஜசங்கரை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story