விழுப்புரத்தில் இருந்து ரெயில் மூலம் பயணம்


விழுப்புரத்தில் இருந்து ரெயில் மூலம் பயணம்
x
தினத்தந்தி 24 Feb 2023 12:15 AM IST (Updated: 24 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ராமேஸ்வரம்- காசி ஆன்மிக பயணம் மேற்கொள்ள விழுப்புரத்தில் இருந்து ரெயில் மூலம் 67 பேர் பயணம் மேற்கொண்டனர்.

விழுப்புரம்

விழுப்புரம்:

இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கையின்போது "ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் இருந்து காசி விஸ்வநாதசாமி கோவிலுக்கு இவ்வாண்டில் 200 பேர் ஆன்மிக பயணம் அழைத்துச்செல்லப்படுவர். இதற்கான செலவினத்தொகை ரூ.50 லட்சத்தை அரசே ஏற்கும் என்று துறையின் அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவித்தார்.

அதன்படி ராமேஸ்வரம்- காசி ஆன்மிக பயணத்துக்கான முதல் அணியில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 67 பேர் நேற்று காலை ராமேஸ்வரத்துக்கு வருகை தந்து அக்னி தீர்த்தம் உள்ளிட்ட 23 தீர்த்தங்களில் புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பஸ்கள் மூலம் அவர்கள் விழுப்புரத்துக்கு அழைத்து வரப்பட்டனர். தொடர்ந்து, விழுப்புரம் ரெயில் நிலையத்தில் இருந்து நேற்று காலை 10.30 மணியளவில் புறப்பட்ட வாரணாசி எக்ஸ்பிரஸ் ரெயில்

மூலம் அவர்கள் காசிக்கு புறப்பட்டனர். இவர்களுடன் இந்து சமய அறநிலையத்துறையின் இணை ஆணையர் செந்தில்வேலவன், உதவி ஆணையர் பாஸ்கர், மருத்துவர் விஷ்ணு மற்றும் கோவில் பணியாளர்கள் 4 பேர் செல்கின்றனர்.

விழுப்புரத்தில் இருந்து வழியனுப்பினர்

இவர்கள் அனைவரையும் விழுப்புரத்தில் இருந்து அறநிலையத்துறை இணை ஆணையர் சிவக்குமார், நகரமன்ற தலைவர் தமிழ்செல்வி ஆகியோர் வழியனுப்பி வைத்தனர். அப்போது அறநிலையத்துறை உதவி ஆணையர் விஜயராணி, ஆய்வாளர் லட்சுமி, செயல் அலுவலர் கார்த்திகேயன், இந்து சமய அறநிலையத்துறை அலுவலக மேலாளர் கண்ணன், ஆஞ்சநேயர் கோவில் பரம்பரை அறங்காவலர் குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இந்த ஆன்மிக பயணத்தின் முதல் அணியினர் காசியிலிருந்து வருகிற 26-ந் தேதி இரவு புறப்பட்டு 28-ந் தேதி ராமேஸ்வரத்துக்கு வருகை தந்து அங்குள்ள ராமநாதசாமி கோவிலில் வழிபாடு செய்து பயணத்தை நிறைவு செய்கின்றனர்.


Next Story