திருவண்ணாமலையில் குப்பை கூளமாக காட்சி அளிக்கும் பயணிகள் நிழற்கூரை


திருவண்ணாமலையில் குப்பை கூளமாக காட்சி அளிக்கும் பயணிகள் நிழற்கூரை
x

குப்பை கூளமாக காட்சி அளிக்கும் பயணிகள் நிழற்கூரையை பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் பல்வேறு துறை அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றது. இங்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.

கலெக்டர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திருவண்ணாமலை அரசு ஐ.டி.ஐ. முன்பு நவீன பயணிகள் நிழற்கூரை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த பயணிகள் நிழற்கூரை தற்போது மிகவும் அசுத்தமாக பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.

மேலும் நிழற்கூரையை சுற்றிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு குப்பை, கூளமாக காட்சி அளிக்கின்றது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு அசுத்தமாக உள்ள நிழற்கூரையை தூய்மை செய்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


Next Story