கல்குவாரி குட்டையில் மூழ்கி டிராவல்ஸ் அதிபர் பலி


கல்குவாரி குட்டையில் மூழ்கி டிராவல்ஸ் அதிபர் பலி
x
தினத்தந்தி 12 Jun 2022 9:59 PM IST (Updated: 13 Jun 2022 10:23 AM IST)
t-max-icont-min-icon

வேலூரில் கல்குவாரி குட்டையில் மூழ்கி டிராவல்ஸ் அதிபர் பலியானார்.

வேலூர்

வேலூர்

சென்னை வேளச்சேரியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 30). இவர் சென்னையில் டிராவல்ஸ் நடத்தி வந்தார். இவருடைய மனைவி ரம்யா வேலூர் கொசப்பேட்டையை சேர்ந்தவராவார்.ரம்யாவின் உறவினர் வீட்டு நிகழ்ச்சி நடந்தது. இதில், கலந்து கொள்வதற்காக சுரேஷ்குமார், மனைவியுடன் வேலூருக்கு வந்தார். நிகழ்ச்சிக்கு பின்னர் அவர், மனைவியுடன் அமிர்தி வன உயிரியல் பூங்காவை பார்க்க காரில் சென்று கொண்டிருந்தார்.

வழியில் சித்தேரி கணேசபுரத்தில் கல்குவாரி குட்டை உள்ளது. அதனை பார்த்ததும் சுரேஷ்குமார் அதில் குளிக்க முடிவு செய்தார்.

உடனே காரை நிறுத்தி இறங்கிய சுரேஷ்குமார் கல் குவாரி குட்டையில் குளித்தார். ரம்யா கரையில் அமர்ந்து இருந்தார். குட்டையின் உள்பகுதிக்கு நீச்சலடித்து சென்ற அவர் எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி தத்தளித்தார்.

இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த ரம்யா, யாராவது வந்து காப்பாற்றுங்கள்.. காப்பாற்றுங்கள்... என்று கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் விரைந்து வந்து குட்டையில் இறங்கி சுரேஷ்குமாரை மீட்டனர். பின்னர் அவரை சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சுரேஷ்குமாரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து அரியூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மனைவியின் கண் முன்பே கணவர் குட்டையில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story