டிரஷர் ஐலண்ட் பள்ளி மாணவ-மாணவி சாதனை


டிரஷர் ஐலண்ட் பள்ளி மாணவ-மாணவி சாதனை
x
தினத்தந்தி 19 Oct 2022 12:15 AM IST (Updated: 19 Oct 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

மாநில செஸ் போட்டியில் டிரஷர் ஐலண்ட் பள்ளி மாணவ-மாணவி சாதனை படைத்தனர்

தென்காசி

திருச்சி செஸ் அசோஷியேசன் சார்பில் மாநில அளவிலான சதுரங்க போட்டி நடைபெற்றது. இதில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த ்போட்டியில் செங்கோட்டை விஸ்வநாதபுரம் டிரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளி மாணவன் ஜகத் பிரபு மாநில அளவில் 2-ம் இடத்தையும், மாணவி ஹரி நந்தனா மாநில அளவில் 7-ம் இடத்தையும் பிடித்து வெற்றி பெற்றனர்.

சாதனை படைத்த மாணவ-மாணவிகள் தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷை சந்தித்து வாழ்த்து பெற்றனர். மேலும் மாணவ-மாணவிகளை பள்ளியின் தாளாளர் டாக்டர் ஷேக் செய்யது அலி, பள்ளி முதல்வர் சமீமா பர்வீன் ஆகியோர் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.



Next Story