கணுக்கால் குறைபாடு சிகிச்சை பிரிவு தொடக்கம்
கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கணுக்கால் குறைபாடு சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிராமப்புற பகுதிகளிலும், மலை கிராமங்களிலும் போதிய விழிப்புணர்வு இல்லாததால், கர்ப்பிணிகள் உரிய சிகிச்சை பெறாத காரணத்தால், பிறவி உள் வளைந்த கணுக்கால் குறைபாடுடன் பிறந்த குழந்தைகள் அதிகளவில் உள்ளனர். அவர்கள் பயன்பெறும் வகையில், கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கணுக்கால் குறைபாடு சிகிச்சை பிரிவை கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் டி.மதியழகன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார். கணுக்கால் சிகிச்சைக்கு பிறகு சிறப்பு காலணிகளை பெற குழந்தைகளின் பெற்றோருக்கு போதிய வசதி இல்லாததால், காலணியை இலவசமாக வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் சங்கீதா, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் மணிமேகலை நாகராஜ், நகர்மன்ற துணைத்தலைவர் சாவித்திரி கடலரசுமூர்த்தி, தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் அஸ்லம், உள்ளிருப்பு மருத்துவ அலுவலர் செல்வி, எலும்பு முறிவு சிகிச்சை துறை தலைவர் டாக்டர் பிரசன்ன வெங்கடேசன், எலும்பு முறிவு டாக்டர் தனசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.