மரங்களை வெட்ட பொதுமக்கள் எதிர்ப்பு
திருப்பூர் மகாலட்சுமி நகர் பகுதியில் குடிநீர் குழாய் பதிக்க அப்பகுதியில் இருந்த மரங்களை வெட்ட பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து, மாநகராட்சி ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
குடிநீர் குழாய்
திருப்பூர் தாராபுரம் ரோடு கோவில்வழி அருகில் மகாலட்சுமி நகர் உள்ளது. இங்கு 100-க்கும் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் 3-ம் குடிநீர் திட்ட குடிநீர் குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று அங்கு குடிநீர் குழாய் அமைப்பதற்காக சாலையோரம் இருந்த மரங்களை அப்புறப்படுத்தும் வகையில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வந்தனர். சில மரங்களை வெட்டி சாய்த்த போது பொதுமக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு மரங்களை அப்புறப்படுத்த கூடாது என்று மாநகராட்சி ஊழியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
பொதுமக்கள் எதிர்ப்பு
மகாலட்சுமி நகர் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட பெரிய மரங்கள் உள்ளன. இதில் 80 மரங்களை வெட்ட ஒப்பந்ததாரர்கள் முடிவு செய்துள்ளது. மரங்களை வெட்ட அனுமதிக்க மாட்டோம். மரங்களை வெட்டாமல் குடிநீர் குழாய் அமைக்க வேண்டும். இந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் மூலம் மரம் வெட்டும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதை கமிஷனர், மேயர் கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்களும் மரங்களை வெட்டாதவாறு குடிநீர் குழாய் அமைக்கும் பணி தொடரும் என்று தெரிவித்தன