மரத்தை வெட்டிய நபர்கள் மீது புகார்


மரத்தை வெட்டிய நபர்கள் மீது புகார்
x
திருப்பூர்


 காங்கயம் திருப்பூர் சாலை தண்ணீர் தொட்டி வீதியில் சாலையோரத்தில் இருந்த வாகை மரத்தை மர்ம நபர்கள் வெட்டி எடுத்துச் சென்றனர்.

 இது குறித்து காங்கயம் கிராம நிர்வாக அலுவலர் கார்த்திகேயன் புகார் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து அவர் கூறும்போது "மரம் வெட்டிய நபர்களை அடையாளம் கண்டு காங்கயம் தாசில்தாரிடம் தெரிவித்துள்ளோம்" என்றார்.

 உரிய அனுமதியில்லாமல் மரங்களை வெட்டும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தன்னார்வ அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story