மரம் வெட்டும் பணியால் போக்குவரத்து பாதிப்பு


மரம் வெட்டும் பணியால் போக்குவரத்து பாதிப்பு
x

திருவாரூர்- மயிலாடுதுறை சாலையில் மரம் வெட்டும் பணியால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருவாரூர்

நன்னிலம்;

திருவாரூர்- மயிலாடுதுறை நெடுஞ்சாலையில் சாலை அகலப்படுத்தும் பணிக்காக இருபுறமும் உள்ள மரங்கள் நெடுஞ்சாலை துறையின் சார்பில் வெட்டப்பட்டு வருகின்றன. நேற்று நன்னிலம் அருகே உள்ள குவலைக்கால் அருகில் மரம் வெட்டி சாலையில் விழுந்ததால் அப்புறப்படுத்தும் பணி தாமதமடைந்தது. இதனால் திருவாரூர் மயிலாடுதுறை சாலையில் செல்லும் வாகனங்கள் மற்றும் அரசு பஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டு சுமார் ½ மணி நேரம் பாதிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.


Next Story