மரம் வளர்ப்பு திட்ட தொடக்க விழா


மரம் வளர்ப்பு திட்ட தொடக்க விழா
x

குளிக்கரை அரசு பள்ளியில் மரம் வளர்ப்பு திட்ட தொடக்க விழா நடந்தது.

திருவாரூர்

கொரடாச்சேரி;

மாணவர்களிடம் மரம் வளர்க்கும் எண்ணத்தை ஊக்குவிக்கும் வகையில் பள்ளிகளில் மரக்கன்று நடுதல், கருத்தரங்குகள் நடத்துதல் உள்ளிட்ட நிகழ்வுகளை கல்வித்துறை மூலம் அரசு செயல்படுத்தி வருகிறது. இதன்படி குளிக்கரை அரசு மேல்நிலைப்பள்ளியில் குறுங்காடு மரம் வளர்ப்பு திட்டம் தொடக்க நிகழ்ச்சி நடந்தது. திட்டத்தை ஊராட்சி தலைவர் மதிவாணன் தொடங்கி வைத்தார். பள்ளி வளாகத்தில் நூற்றுக்கு மேற்பட்ட மரக்கன்றுகளை மாணவ- மாணவிகள் நட்டு வைத்தனர். தொடர்ந்து பொதுமக்களுக்கும் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மரங்களை பேணிக்காப்போம். சுற்றுச்சூழலை பாதுகாப்போம் என்ற முழக்கத்தோடு மாணவர்கள் மரக்கன்றுகளை நட்டனர். நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் உள்ளிட்ட ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள், ஊராட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


Next Story