மரம் வளர்ப்பது மனிதர்கள் அனைவரின் கடமை
மரம் வளர்ப்பது மனிதர்கள் அனைவரின் கடமை என்று மாவட்ட நீதிபதி ஜெசிந்தா மார்டின் கூறினாா்.
தஞ்சாவூர்;
தஞ்சை ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவுப்படி உலக சுற்றுச்சூழல் தினத்தை கொண்டாடும் வகையில் சட்ட விழிப்புணர்வு முகாம் நேற்று நடந்தது. இதற்கு மாவட்ட முதன்மை நீதிபதி ஜெசிந்தா மார்டின் தலைமை தாங்கி, மரக்கன்றுகளை நட்டு முகாமை தொடங்கி வைத்தார்.தொடர்ந்து தலைமையிடத்து நீதிபதிகள் இந்திராணி, சுந்தர்ராஜன், மலர்விழி, வடிவேல், இந்திராகாந்தி, நாகராஜன், முருகன், தங்கமணி, கீதா, சுசீலா, இளவரசி, பாரதி, முருகேசன், வக்கீல்கள் சங்க தலைவர் அமர்சிங், செயலாளர் சசிகுமார், அரசு வக்கீல் சத்தியமூர்த்தி ஆகியோர் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். பின்னர் மாவட்ட முதன்மை நீதிபதி ஜெசிந்தா மார்டின், மரம் வளர்ப்பது மனிதர்களாக பிறந்த அனைவரின் கடமை என மரம் வளர்ப்பின் முக்கியத்துவம் பற்றியும், பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்தும் விரிவாக பேசினார். இதில் வக்கீல்கள், கோர்ட்டு ஊழியர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் நிர்வாக அலுவலர் சந்தோஷ்குமார் மற்றும் சட்ட தன்னார்வலர்கள் செய்திருந்தனர்.