பசுமை வேலூர் திட்டம் சார்பில் மரக்கன்று நடும் விழா


பசுமை வேலூர் திட்டம் சார்பில் மரக்கன்று நடும் விழா
x

வள்ளிமலையில் பசுமை வேலூர் திட்டம் சார்பில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.

வேலூர்

காட்பாடி தாலுகா வள்ளிமலை சுப்பிரமணியசுவாமி கோவில் மாடவீதியில் வேலூர் வி.ஐ.டி. சார்பில், பசுமை வேலூர் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் மற்றும் பூச் செடிகள் நடும் பணி நேற்று நடைபெற்றது. இதில் மகிழம் பூ, நாகலிங்க செடி, பவழமல்லி, வில்வச்செடி உள்ளிட்ட பலவிதமான பூச்செடிகள் நடப்பட்டன. காட்பாடி ஒன்றியக்குழு தலைவர் வேல்முருகன் கலந்து கொண்டு மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் வள்ளிமலை கோவில் செயல் அலுவலர் பரந்தாமகண்ணன், எருக்கம்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் கோமதி சுதாகர், தென்னிந்திய புரோகிதர்கள் சங்க துணைத் தலைவர் குமார் மற்றும் கோவில் அர்ச்சகர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Next Story