குதிரைமொழி கிராமத்தில் மரக்கன்று வளர்ப்பு பயிற்சி முகாம்
குதிரைமொழி கிராமத்தில் மரக்கன்று வளர்ப்பு பயிற்சி முகாம் நடந்தது.
தூத்துக்குடி
உடன்குடி:
உடன்குடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 17 கிராம ஊராட்சியில் பணியாற்றி வரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக திட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு குதிரைமொழி ஊராட்சி சோலைகுடியிருப்பு கிராமத்தில் மரக்கன்றுகள் உருவாக்குதல் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. அதிகமான மரக்கன்றுகளை தயாரித்து 17 ஊராட்சி முழுவதும் ஆங்காங்கே மரக்கன்றுகளை நடவு செய்து கூண்டு அமைத்து மரக்கன்றுகளை வளர்த்து பசுமையை உருவாக்க வேண்டும் என்றும், மரக்கன்று வளர்ப்பதில் உடன்குடி ஊராட்சி ஒன்றியம் சாதனை படைத்து மாவட்டத்தில் முதலிடம் பிடித்தது என்ற நிலையை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜான்சிராணி, கிராம வட்டார வளர்ச்சி அலுவலர் சசிகுமார். பணி மேற்பார்வையாளர்கள் லதா, விஜயராகவன் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story