மரங்களில் ரசாயனம் பூசியதால் பட்டுப்போகும் அவலம்


மரங்களில் ரசாயனம் பூசியதால் பட்டுப்போகும் அவலம்
x
திருப்பூர்


திருப்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து கல்லூரி சாலையில் 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது கணியாம்பூண்டி. இங்கு மைக்ரோ கிட்ஸ் பள்ளி அருகே சாலையோரத்தில் 2 வாகை மரங்கள் உள்ளது. இந்த மரங்கள் சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு கணியாம்பூண்டி ஊராட்சி சார்பில் நடப்பட்டது. இந்த மரங்கள் தற்போது நன்கு வளர்ந்து பாத சாரிகளுக்கும், இருசக்கர வாகனங்களில் வருபவர்களுக்கும் நிழல் தருகின்றன. இந்த நிலையில் சமீபத்தில் மர்ம ஆசாமிகள் சிலர் இந்த மரத்தின் அடியில் மரப்பட்டையை உரித்து விட்டு அதில் வெள்ளை நிறத்தில் ரசாயனத்தை தடவி வைத்துள்ளனர். இதனால் இந்த மரங்கள் தற்போது கொஞ்சம், கொஞ்சமாக பட்டுப்போய் வருகின்றன. சம்பந்தப்பட்ட ஊராட்சி அதிகாரிகள் மரத்தில் ரசாயனத்தை பூசிய மர்ம ஆசாமிகள் யார் என கண்டுபிடித்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story