மழைக்கால முன்னெச்சரிக்கையாக மரக்கிளைகள் அகற்றம்


மழைக்கால முன்னெச்சரிக்கையாக மரக்கிளைகள் அகற்றம்
x
தினத்தந்தி 18 Nov 2022 12:45 AM IST (Updated: 18 Nov 2022 12:45 AM IST)
t-max-icont-min-icon

மழைக்கால முன்னெச்சரிக்கையாக மரக்கிளைகள் அகற்றப்பட்டன.

திருவாரூர்

கடந்த சில மாதங்களாக கூத்தாநல்லூர் பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் நெற்பயிர்கள் சேதம் அடைந்தது. மேலும், மழை பெய்யும் போது அவ்வப்போது காற்று வீசியதால் பெரும்பாலான இடங்களில் மரக்கிளைகள் முறிந்தன. தொடர்ந்து வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைய வாய்ப்பு இருப்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கூத்தாநல்லூர் அருகே உள்ள, ஓகைப்பேரையூரில் ஊராட்சி தலைவர் சின்னையாமுருகையன் தலைமையில் வீடுகள், பள்ளிகள், அரசு அலுவலகங்கள் மற்றும் ஆபத்தான இடங்களில் இருக்க கூடிய மரங்கள் மற்றும் மரக்கிளைகளை அகற்றும் பணி நடந்தது. இதற்கான பணிகளில் ஊராட்சி தூய்மை பணியாளர்கள், மின் வாரிய ஊழியர்கள் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஈடுபட்டனர். மேலும், ஆபத்தான மின் கம்பிகள், நடைபாதைக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு சீரமைப்பு பணிகள் நடந்தன.


Next Story