பழங்குடியின மக்கள் பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்


பழங்குடியின மக்கள் பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்
x
தினத்தந்தி 17 Jan 2023 12:15 AM IST (Updated: 17 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பழங்குடியின மக்கள் பொங்கல் பண்டிகை கொண்டாடினர்.

நீலகிரி

கோத்தகிரி,

கோத்தகிரி அருகே செம்மனாரை கிராமம் உள்ளது. இங்கு குரும்பர் மற்றும் இருளர் பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர். ஆண்டுதோறும் பழங்குடியின மக்கள் பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடி மகிழ்வது வழக்கம். இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி நேற்று ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாரம்பரிய இசைக்கருவிகள் இசைத்த படி நடனமாடினர். தொடர்ந்து உரியடி, வழுக்கு மரம் ஏறுதல் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. அதில் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். பழங்குடியின குழந்தைகள் தங்களது மொழியில் பாட்டு பாடி மகிழ்ந்தனர். தொடர்ந்து குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. வனப்பகுதிக்கு மத்தியில் உள்ள பழங்குடியின கிராமத்தில் நடைபெற்ற பொங்கல் கொண்டாட்டத்தை, சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமானோர் சென்று விழாவை கண்டு மகிழ்ந்தனர்.

நீலமலை குன்றின் குரல்கள் அமைப்பின் சார்பில், 9-வது ஆண்டாக பொங்கல் விழா கோத்தகிரி மார்க்கெட் திடலில் நேற்று நடைபெற்றது. கட்டபெட்டு, பெட்டட்டி, ஓரசோலை, கெங்கரை, குமரன் காலனி, ஈளாடா உள்பட 21 கிராமங்களை சேர்ந்த குழந்தைகள் பங்கேற்ற தமிழர் பாரம்பரிய கலை நிகழ்ச்சி, போட்டிகள் நடைபெற்றன. இதில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் இனிப்பு பொங்கல் வழங்கப்பட்டது.


Next Story