பழங்குடியின மாணவ- மாணவிகள்உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
பழங்குடியின மாணவ- மாணவிகள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் கலெக்டர் லலிதா தகவல்
மயிலாடுதுறை மாவட்டத்தில் 2022-23-ம் கல்வியாண்டில் கல்வி பயிலும் பழங்குடியின மாணவர்கள் ஊக்குவிப்பு உதவித்தொகை விண்ணப்பங்களை கல்வி பயிலும் பள்ளிகளில் ஒப்படைக்குமாறு மாவட்ட கலெக்டர் லலிதா தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும், சுயநிதிபள்ளி மற்றும் கல்லூரிகளில் 2022-23-ம் கல்வி ஆண்டில் கல்வி பயிலும் பழங்குடியின மாணவர்கள் பெண்கல்வி ஊக்குவிப்பு உதவித்தொகை பெற 3 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களும், ப்ரிமெட்ரிக், போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை மற்றும் உயர்கல்வி சிறப்பு உதவித்தொகை பெற தகுதியுள்ள மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். பழங்குடியின் மாணவர்கள் தமது கல்வி உதவித்தொகை விண்ணப்பங்களை உரிய முறையில் பூர்த்தி செய்து சாதிச்சான்று, வருமானச்சான்று, மதிப்பெண் சான்று, வங்கி சேமிப்பு புத்தக நகல் மற்றும் ஆதார் அட்டை நகல் ஆகிய விவரங்களுடன் தாம் கல்வி பயிலும் கல்வி நிலையங்களில் ஒப்படைக்க வேண்டும்.
உரிய சான்றுகளுடன் பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசிலிக்கப்பட்டு இக்கல்வி ஆண்டிற்கான உதவித்தொகை வழங்கப்படும். இதனை பழங்குடியின மாணவர்கள் பெற்று பயனடையலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.