சுதந்திர போராட்ட வீரரின் வாரிசுக்கு மரியாதை


சுதந்திர போராட்ட வீரரின் வாரிசுக்கு மரியாதை
x

தூத்துக்குடியில் சுதந்திர போராட்ட வீரரின் வாரிசுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

தூத்துக்குடி

மத்திய அரசு 75-வது சுதந்திரதினத்தை முன்னிட்டு, சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுகளை கவுரவிக்க மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. அதன்படி தூத்துக்குடியை சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர் உலகநாதனின் மகள் முத்தம்மாளின் வீட்டுக்கு தூத்துக்குடி ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையில் பாதுகாப்பு படையினர் சென்றனர். அங்கு முத்தம்மாளுக்கு சால்வை அணிவித்து கவுரவித்தனர். நிகழ்ச்சியில் ரெயில்வே பாதுகாப்பு படையினர் கலந்து கொண்டனர்.


Next Story