கார்கில் போரில் இறந்தவர்களுக்கு அஞ்சலி
ஆரணியில் கார்கில் போரில் இறந்தவர்களுக்கு அஞ்சலி
திருவண்ணாமலை
ஆரணி
ஆரணி ரெட் கிராஸ் சங்கம், அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பாக கார்கில் போரில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
டவுன் போலீஸ் நிலைய வளாகத்தில் இருந்து நிர்வாகிகள் மலர் வளையத்துடன் ஊர்வலமாக கொண்டு சென்று ஆரணி கோட்டை மைதானத்தில் உள்ள கார்கில் நினைவுத்தூண் முன்பு மலர் வளையம் வைத்து, மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.
நிகழ்ச்சியில் சப்-இன்ஸ்பெக்டர்கள் சுந்தரேசன், கிருஷ்ணமூர்த்தி, ஆரணி நகரமன்ற தலைவர் ஏ.சி.மணி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். மேலும் ரெட்கிராஸ் சங்கத் தலைவர் குருராஜாராவ், செயலாளர் சண்முகம்,
அனைத்து வியாபாரிகள் சங்கத் தலைவர் சர்மா, நெல் அரிசி வியாபாரிகள் சங்க மாநில துணைத்தலைவர் பி.நடராஜன் உள்பட சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story