மாவீரன் சுந்தரலிங்கனார் உருவப்படத்துக்கு மரியாதை
நெல்லையில் மாவீரன் சுந்தரலிங்கனார் உருவப்படத்துக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
சுதந்திர போராட்ட வீரர் சுந்தரலிங்கனார் நினைவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி நெல்லை பாளையங்கோட்டை மகாராஜ நகரில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மாவீரன் சுந்தரலிங்கனார் உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டது. நெல்லை மாவட்ட தலைவர் கண்மணி மாவீரன் தலைமையில் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
இதில் மாவீரர் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க தலைவர் மாரியப்ப பாண்டியன், த.ம.மு.க. டவுன் மண்டல செயலாளர் முத்துவேல் ராஜா, தேவேந்திரகுல வேளாளர் மக்கள் முன்னேற்ற கழக மண்டல செயலாளர் மங்களராஜ் பாண்டியன், சமூக ஆர்வலர் புல்லட் ராஜா, சாமுவேல், முத்துப்பாண்டி, துரைசாமி, பொன்முருகன், மக்கள் ஜனநாயக கட்சி முத்துவீரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மாவீரர் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்கம் சார்பாக நெல்லை ராமையன்பட்டியில் உள்ள கட்சி அலுவலகத்தில் சுந்தரலிங்கனார் உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டது. அங்கு இயக்க தலைவர் மாரியப்ப பாண்டியன் தலைமையில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
இதில் அமைப்பு செயலாளர் முத்து கருப்பன், தூத்துக்குடி மாவட்ட செயலாளர் தர்மராஜ், நெல்லை மாவட்ட செயலாளர் பிரேம்குமார், தொழில் அதிபர் எம்.எம்.மாரியப்ப பாண்டியன், இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் ஏ.பி.முத்து பாண்டியன், தச்சநல்லூர் மண்டல தலைவர் தங்கவேலு, பாளையங்கோட்டை ஒன்றிய செயலாளர் பேச்சி பாண்டியன், மகளிர் அணி தலைவி சாந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.