எம்.ஜி.ஆர்.சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்தநாள் விழாவை ஒட்டி அ.தி.மு.க. சார்பில் சிவகங்கையில் அவரது திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் செந்தில்நாதன் எம்.எல்.ஏ, முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சிவகங்கை,
முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்தநாள் விழாவை ஒட்டி அ.தி.மு.க. சார்பில் சிவகங்கையில் அவரது திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் செந்தில்நாதன் எம்.எல்.ஏ, முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
எம்.ஜி.ஆர்.பிறந்த நாள்
முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்த நாள் விழா சிவகங்கை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கொண்டப்பட்டது. இதையொட்டி சிவகங்கை அரண்மனை வாசலில் உள்ள எம்.ஜி.ஆரின் திருவுருவ சிலைக்கு மாவட்ட கழக செயலாளர் செந்தில்நாதன் எம்.எல். ஏ. தலைமையிலும் முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் முன்னிலையிலும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் நாகராஜன், குணசேகரன், ஒன்றிய கழக செயலாளர் கருணாகரன், செல்வமணி, கோபி, ஸ்ரீதர், பழனிச்சாமி, சிவாஜி, ஜெயபிரகாஷ், பாரதிராஜன், நகர் கழக செயலாளர் என்.எம். ராஜா, மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் கூட்டுறவு ஒன்றிய தலைவர் புவனேந்திரன், முன்னாள் நகராட்சி தலைவர் அர்ச்சுணன், மாவட்ட கவுன்சிலர்கள் கோமதி தேவராஜ், மாரிமுத்து, செல்வராஜ், காளையார்கோவில் யூனியன் தலைவர் ராஜேஸ்வரி கோவிந்தராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கலந்து கொண்டவர்கள்
மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைச்செயலாளர் தமிழ் செல்வம், அண்ணா தொழிற்சங்க செயலாளர் அசோக்குமார், நகர் அவைத்தலைவர் வி.ஆர்.பாண்டி, நகர்மன்ற உறுப்பினர்கள் ராபர்ட், கிருஷ்ணகுமார், தாமோதரன், மாவட்ட மாணவரணி துணை செயலாளர் ராஜ்குமார், எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளர் இளங்கோவன், உள்பட பலர் கலந்து கொண்டனர். இதையொட்டி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
,இது தொடர்பாக செந்தில்நாதன் எம்.எல்.ஏ. கூறியதாவது:-
எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்த நாளை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவகங்கை, காரைக்குடி, தேவகோட்டை, உள்பட 4 நகரங்கள், 30 ஒன்றிய கழகங்கள், 11 பேரூராட்சிகள் மற்றும் 445 கிராம ஊராட்சிகளில் எம்.ஜி.ஆரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது என்றார்.
காளையார்கோவில்
காளையார் கோவில் கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் சிலுக்கப்பட்டியில் ஒன்றிய செயலாளர் புதுக்கோட்டை சிவாஜி தலைமையில் எம்.ஜி.ஆரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் பாண்டி கண்ணு மற்றும் கண்ணன், பூமி சதீஷ், பாலு,சந்தானம், மூர்த்தி, ரஞ்சித் சிவா உள்பட பலர் கலந்து கொண்டனர்.