தூத்துக்குடியில் விசுவநாததாஸ் உருவப்படத்துக்கு மரியாதை


தூத்துக்குடியில் விசுவநாததாஸ் உருவப்படத்துக்கு மரியாதை
x

தூத்துக்குடியில் விசுவநாததாஸ் உருவப்படத்துக்கு மரியாதை நடத்தப்பட்டது.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட சி.ஐ.டி.யு. சங்கம் சார்பில் சுதந்திர போராட்ட தியாகி விசுவநாததாஸ் பிறந்தநாள் விழா சிதம்பரநகரில் கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு அலங்கரிக்கப்பட்ட அவரது உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாவ்டட தலைவர் பேச்சிமுத்து தலைமை தாங்கினார். செயலாளர் நாகராஜ், மாவட்ட துணைத்தலைவர் பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் ஆறுமுகம், சங்க கவுரவத்தலைவர் சதாசிவம், பொருளாளர் வேல்முருகன், மாதர் சங்க மாவட்ட தலைவர் பூமயில் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story