தூத்துக்குடியில்கடலில் உயிர் நீத்த மாலுமிகளுக்கு மரியாதை


தூத்துக்குடியில்கடலில் உயிர் நீத்த மாலுமிகளுக்கு மரியாதை
x
தினத்தந்தி 6 April 2023 12:15 AM IST (Updated: 6 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில்கடலில் உயிர் நீத்த மாலுமிகளுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

தூத்துக்குடி

1919-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5-ந் தேதி முதன் முதலாக மும்பையில் இருந்து லண்டனுக்கு வாணிப கப்பல் இயக்கப்பட்டது. இதனை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 5-ந் தேதி கடற்சார் வாணிப தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் உள்ள கடலில் உயிர்நீத்த மாலுமிகளின் நினைவாக அமைக்கப்பட்டு உள்ள நினைவுத்தூணுக்கு வ.உ.சி. துறைமுக ஆணைய தலைவர் தா.கி.ராமச்சந்திரன் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மரியாதை செலுத்தினர். இதனை தொடர்ந்து வழக்கமாக துறைமுகத்தில் நடைபெறக்கூடிய நிகழ்ச்சிகள் இந்த ஆண்டு நடைபெறவில்லை.


Next Story