வீரன் சுந்தரலிங்கனார் உருவப்படத்திற்கு மரியாதை
சங்கரன்கோவிலில் வீரன் சுந்தரலிங்கனார் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டது.
தென்காசி
சங்கரன்கோவில்:
தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வீரன் சுந்தரலிங்கனார் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமை தாங்கி, வீரன் சுந்தரலிங்கனார் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதில் தலைமை செயற்குழு உறுப்பினர் பரமகுரு, மாவட்ட அவைத்தலைவர் பத்மநாபன், மாநில மருத்துவர் அணி துணைச் செயலாளர் டாக்டர் செண்பக விநாயகம், மாவட்ட துணைச் செயலாளர் புனிதா, தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் மாரிச்சாமி, வெள்ளத்துரை, மகேஸ்வரி, புளியங்குடி நகர செயலாளர் அந்தோணிசாமி, சங்கரன்கோவில் நகராட்சி சேர்மன் உமாமகேஸ்வரி சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story