பணியின் போது வீர மரணமடைந்த போலீசாருக்கு அஞ்சலி
பணியின் போது வீர மரணமடைந்த போலீசாருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
புதுக்கோட்டை
காவல்துறையில் பணியில் இருந்த போது வீர மரணம் அடைந்த போலீசாருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நீத்தார் நினைவு நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது. அந்த வகையில் நீத்தார் நினைவு நாள் நேற்று கடைப்பிடிக்கப்பட்டது. புதுக்கோட்டையில் ஆயுதப்படை மைதானத்தில் உள்ள ஸ்தூபிக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதாபாண்டே மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். 60 குண்டுகள் முழங்க மரியாதை செய்யப்பட்டது. மேலும் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்தநிகழ்ச்சியில் போலீஸ் அதிகாரிகள், போலீசார் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story