திருச்சி: சுந்தரத்தினேஸ்வரர் கோவிலில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு
ஊட்டத்தூரில் சுந்தரத்தினேஸ்வரர் கோவிலில் நடைபெறும் திருப்பணிகளை அறநிலையதுறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார்.
திருச்சி,
திருச்சி மாவட்டம், புள்ளம்பாடி ஒன்றியம் ஊட்டத்தூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற அகிலாண்டேஸ்வரி உடனுறை சுத்தரத்தினேஸ்வரர் கோவில். இக்கோவில் சோழர் காலத்தில் கட்டப்ட்டதாகும்.
இக்கோவிலில் குடமுழக்கு திருப்பணிகள் நடைபெற்று சுமார் 17 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது கோவிலில் திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த திருப்பணிகளை இந்து அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு நேரில் சென்று ஆய்வு செய்தார்.
ராஜகோபுரம், நடராஜர் சன்னதி,அம்பாள் சன்னதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை பார்வையிட்டு அதிகாரிகளிடம் ஆலோசனை வழங்கினார். மேலும், திருப்பணிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருகிறோம் என உறுதி அளித்தார்.
இந்த ஆய்வில் அவருடன் இந்து அறநிலையதுறை ஆணையர் குமரகுருபரன், திருச்சி மண்டல இணை இயக்குனர் லால்குடி சவுந்தரபாண்டியன் எம்எல்ஏ, திருச்சி மாவட்ட திமுக பொறுப்பாளர் வைரமணி, ஒன்றிய குழு தலைவர் ரசியாகோல்டன்ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர் செல்வராசா, வட்டார வளர்ச்சி அலுவலர் மாதவன், ஊராட்சி மன்ற தலைவர் இந்திராஅறிவழகன், கோவில் செயல் அலுவலர் முத்துராஜ் உள்ளிட்ட முக்கியபிரமுகர்கள் கலந்துகொண்டனர்.