மானாமதுரையுடன் நிறுத்தப்பட்ட திருச்சி-ராமேசுவரம் ரெயில் ராமநாதபுரம் வரை இயக்கம்


மானாமதுரையுடன் நிறுத்தப்பட்ட திருச்சி-ராமேசுவரம் ரெயில் ராமநாதபுரம் வரை இயக்கம்
x

மானாமதுரையுடன் நிறுத்தப்பட்ட திருச்சி-ராமேசுவரம் ரெயில் ராமநாதபுரம் வரை இயக்கப்படுகிறது.

மதுரை


மதுரை கோட்ட ரெயில்வேக்கு உட்பட்ட சூடியூர்-பரமக்குடி இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடந்ததால் அந்த பாதையில் இயக்கப்படும் ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டது. இதையடுத்து, திருச்சி-ராமேசுவரம் எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.16849/16850) கடந்த 13-ந் தேதி முதல் வருகிற 29-ந் தேதி வரை மானாமதுரை-ராமநாதபுரம் இடையே ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து அந்த ரெயில் நேற்று முதல் ராமநாதபுரம் வரை இயக்கப்பட்டு வருகிறது. அதாவது, வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமை தவிர பிற நாட்களில் மட்டும் ராமநாதபுரம் வரை இயக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


Related Tags :
Next Story