இலங்கைக்கு கடத்த முயன்ற 35 மஞ்சள் மூடைகள்-படகு பறிமுதல்


இலங்கைக்கு கடத்த முயன்ற   35 மஞ்சள் மூடைகள்-படகு பறிமுதல்
x
தினத்தந்தி 30 Nov 2022 12:15 AM IST (Updated: 30 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

மண்டபம் அருகே இலங்கைக்கு கடத்த முயன்ற 35 மஞ்சள் மூடைகள், படகு சிக்கின. போலீசாரை பார்த்ததும் 4 மோட்டார் சைக்கிள்களை நிறுத்திவிட்டு தப்பிய கும்பலை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

ராமநாதபுரம்

மண்டபம்,

மண்டபம் அருகே இலங்கைக்கு கடத்த முயன்ற 35 மஞ்சள் மூடைகள், படகு சிக்கின. போலீசாரை பார்த்ததும் 4 மோட்டார் சைக்கிள்களை நிறுத்திவிட்டு தப்பிய கும்பலை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

வாகன சோதனை

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே உள்ள வேதாளை கடற்கரை பகுதியில் நேற்று முன்தினம் இரவு குற்ற நுண்ணறிவு பிரிவு மற்றும் கடலோர போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வாகனங்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

அப்போது 4 மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்கள், அந்த வாகனங்களை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். போலீசார் விரட்டிச்சென்று ஒரு 17 வயது சிறுவனை பிடித்தனர்.

35 மூடைகள்-படகு

விசாரணையில் அவர், வேதாளை கடற்கரையோரத்தில் நிறுத்தி வைத்திருந்த நாட்டுப்படகு ஒன்றில் 35 மூடைகளில் மஞ்சள் அடுக்கி வைத்து இருப்பதாகவும், அதனை இலங்கைக்கு கடத்த இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். போலீசார் விரைந்து சென்று அந்த நாட்டுப்படகையும், 35 மஞ்சள் மூடைகளையும் கைப்பற்றினர். அந்த மூடைகளில் 2 ஆயிரத்து 100 கிலோ மஞ்சள் இருந்தது.

பின்னர் அந்த நபரை மண்டபம் கடலோர காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைப்பற்றப்பட்ட மஞ்சள் மூடைகள் மற்றும் பிடிபட்ட நபர் மண்டபம் சுங்கத்துறை அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டார். தப்பி ஒடியவர்கள் யார்? என்பது குறித்தும் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டுள்ளனர். அவர்கள் வந்த 4 மோட்டார் சைக்கிள்களையும் போலீசார் கைப்பற்றி இருக்கிறார்கள்.

கண்காணிப்பு தீவிரம்

இதே வேதாளை கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்த இருந்த சுமார் 300 கிலோ போதை பவுடர் பிடிபட்ட சம்பவத்துக்கு மறுநாளே அதே கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 2,100 கிலோ மஞ்சள் பிடிபட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. எனவே அந்த பகுதியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


Related Tags :
Next Story