செயிண்ட் பவுல் மெட்ரிக் பள்ளியில் முப்பெரும் விழா
சங்கரன்கோவில் அருகே செவல்குளம் செயிண்ட் பவுல் மெட்ரிக் பள்ளியில் முப்பெரும் விழா நடந்தது.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் அருகே செவல்குளம் செயிண்ட் பவுல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா, மழலையர் பட்டமளிப்பு விழா மற்றும் சமூக சேவகர்களுக்கு விருது வழங்கும் விழா என முப்பெரும் விழா நடைபெற்றது. விழாவிற்கு செயின்ட் பவுல் கல்வி நிறுவனத்தின் தலைவர் எம்.ஏ.சூசை தலைமை தாங்கினார். பள்ளியின் தாளாளர் நாகராஜ், பள்ளி அறக்கட்டளை தலைவர் பியூலா ஹெப்சிபா நாகராஜ், பள்ளி முதல்வர் ராபர்ட் ராஜா, துணை முதல்வர் கோகுல ராஜகண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் சிறப்பு விருந்தினராக ராஜா எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பேசினார். மாணவ- மாணவிகளின் கலைநிகழ்ச்சிகளை தொடர்ந்து பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி, சிலம்பப் போட்டி ஆகியவை நடைபெற்றது. விழாவில் கழுகுமலை பேரூராட்சி தலைவர் அருணா சுப்பிரமணியம், துணைத் தலைவர் சுப்பிரமணியம், திருவேங்கடம் பேரூராட்சி தலைவர் பாலமுருகன், குருவிகுளம் யூனியன் தலைவர் விஜயலட்சுமி, சிறைத்துறை சூப்பிரண்டு செல்வ குருநாதன், வழக்கறிஞர் சதீஷ் மற்றும் மாணவ-மாணவிகளின் பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.