சமரச மைய செயல்பாடு குறித்த முத்தரப்பு கலந்துரையாடல் கூட்டம்
சமரச மைய செயல்பாடு குறித்த முத்தரப்பு கலந்துரையாடல் கூட்டம்
தஞ்சை கோர்ட்டு வளாகத்தில் சமரச மைய செயல்பாடுகள் குறித்து முத்தரப்பு கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட முதன்மை நீதிபதி ஜெசிந்தா மார்ட்டின் கலந்துகொண்டார்.
கலந்துரையாடல் கூட்டம்
சென்னை ஐகோர்ட்டு உத்தரவுப்படி தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிபதிகள், வக்கீல்கள் மற்றும் மீடியேட்டர்களுக்கு இடையிலான முத்தரப்பு கலந்துரையாடல் கூட்டம் தஞ்சையில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தஞ்சை மாவட்ட சமரச மைய ஒருங்கிணைப்பாளரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான ஜெசிந்தா மார்ட்டின் தலைமை தாங்கினார்.
இதில் திரளான வக்கீல்கள் மீடியேட்டர்கள் மற்றும் தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிபதிகளும் கலந்து கொண்டனர். இதில் முதன்மை நீதிபதி ஜெசிந்தா மார்ட்டின் பேசுகையில் சமரச மையத்தின் செயல்பாடுகள் குறித்தும், சமரச மையத்தில் முடித்து வைக்கப்பட்ட வழக்குகளின் புள்ளி விவரங்கள் குறித்தும் பேசினார்.
கலந்துரையாடல்
இதில் தமிழ்நாடு மாநில சமரச மையத்தின் மூத்த பயிற்சியாளர் ரெத்னதாரா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வக்கீல்கள் மற்றும் நீதிபதிகளுடன் மீடியேஷன் குறித்து கலந்துரையாடல் நடத்தினார். முன்னதாக மாவட்ட சமரச மையத்தின் தலைவர் மலர்விழி வரவேற்றார்.
விழாவில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் துணைத்தலைவர் வேலு.கார்த்திகேயன், தஞ்சை வக்கீல் சங்க செயலாளர் சசிகுமார், வக்கீல் சங்க தலைவர்கள் விவேகானந்தன் (கும்பகோணம்), மாஸ்கோ (பட்டுக்கோட்டை), தமிழ்ச்செல்வன் (ஒரத்தநாடு), சுப்பிரமணியன் (திருவையாறு), அரசு குற்றவியல் வக்கீல் சத்தியமூர்த்தி, அரசு வக்கீல் சண்முகசுந்தரம், வக்கீல்கள் பாலையன், ஜெயபால், ஜீவக்குமார், கம்பன், சாரதாம்பாள், சிவக்குமார், மோகன்ராஜ், குணாளன் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.
ஏற்பாடுகள்
முடிவில் மாவட்ட சமரச மையத்தின் ஒருங்கிணைப்பாளர் இந்திராகாந்தி நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை தலைமை நிர்வாக அதிகாரி பால்ராஜ், சமரச மையத்தின் நோடல் அதிகாரி ஆரோக்கியராஜ் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள், தன்னார்வலர்கள் செய்திருந்தனர்.