பசும்பொன் பகுதியில் டிரோன்கள் பறக்க தடை
பசும்பொன் பகுதியில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.
ராமநாதபுரம்
பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை விழாவை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன் கிராமத்தில் உள்ள தேவர் நினைவிடத்தில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அரசு சார்பில் நாளை காலை மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்த உள்ளார். இதையொட்டி இன்று மற்றும் நாளை 2 நாட்களில் கமுதி பசும்பொன் பகுதியில் தனிநபர்கள் டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறப்பதற்கு அப்பகுதியில் தடை விதிக்கப்பட்டு உள்ளது. தடையை மீறி டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story