லாரி- கார் மோதல்; 2 சிறுமிகள் காயம்


தினத்தந்தி 29 Dec 2022 12:15 AM IST (Updated: 29 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கயத்தாறு அருகே லாரி- கார் மோதிக் கொண்ட விபத்தில் 2 சிறுமிகள் காயம் அடைந்தனர்.

தூத்துக்குடி

கயத்தாறு:

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் இருந்து மதுரைக்கு திருமண நிகழ்ச்சிக்காக சாகுல் ஹமீது என்பவரது குடும்பத்தினர் நேற்று காரில் சென்று கொண்டிருந்தனர். கயத்தாறு அருகே சென்றபோது எதிரே மகராஷ்டிராவில் இருந்து கேரளாவை நோக்கி ஒரு லாரி வந்து கொண்டிருந்தது.

திடீரென டயர் பஞ்சரானதால் லாரியை ரோட்டு ஓரத்தில் இருந்த பஞ்சர் கடையை நோக்கி டிரைவர் திருப்பினார். அப்போது கார் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் இருந்த அகமது அபியா (வயது 10), சுமையா (7) ஆகிய 2 குழந்தைகளும் லேசான காயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து கயத்தாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் செல்வத்திடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story