சரக்கு வேன் மீது லாரி மோதி டிரைவர் பலி
சரக்கு வேன் மீது லாரி மோதி டிரைவர் பலியானார்.
கரூர்
திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சிவசங்கர் (வயது 39). இவர் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் சரக்கு வேன் டிரைவராக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று மதியம் வேனில் சரக்குகளை ஏற்றிக்கொண்டு கரூரில் இறக்கிவிட்டு மீண்டும் கோவையை நோக்கி சென்று கொண்டிருந்தார். தென்னிலை மீனாட்சி வலசு பிரிவு அருகே வந்தபோது எதிரே வந்த லாரி சரக்கு வேன் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே சிவசங்கர் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து தென்னிலை போலீசார் சிவசங்கர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து லாரி டிரைவர் பெரம்பலூர் மாவட்டம், துறையூரை சேர்ந்த துரைமுருகன் என்பவரை தென்னிலை இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story