மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி விபத்து - தொழிற்சாலை ஊழியர் பலி


மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி விபத்து - தொழிற்சாலை ஊழியர் பலி
x

திருவள்ளூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் தனியார் தொழிற்சாலை ஊழியர் உயிழந்தார்.

திருவள்ளூர்,

சென்னை முகப்பேர் 1வது பிளாக்கை சேர்ந்தவர் கருப்புசாமி(வயது28). இவர் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள தனியார் தொழிற்சாலை ஊழியர் ஆவார். இவர் இன்று காலை தனது மோட்டார் சைக்கிளில் அதே பகுதியை சேர்ந்த மோகனசுந்தரம்(38) என்பவருடன் ஸ்ரீபெரும்புதூர் நோக்கி சென்றனர்.

திருவள்ளூர் ஸ்ரீபெரும்புதூர் நெடுஞ்சாலையில் போலிவாக்கம் தனியார் தொழிற்சாலை அருகே வரும்போது எதிரே வந்த லாரி மோதி பின்னால் வந்த தனியார் பஸ் முன்பக்க டயரில் சிக்கினார்.

இந்த விபத்தில் கருப்புசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் பலத்த காயமடைந்த மோகன சுந்தரத்தை அப்பகுதியினர் மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவகல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

தகவலறிந்த மணவாளநகர் போலீசார் பலியான கருப்புசாமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story