வேன் மீது லாரி மோதல்; ரூ.3½ லட்சம் முட்டைகள் சேதம்
வேன் மீது லாரி மோதிய விபத்தில் ரூ.3½ லட்சம் மதிப்பிலான முட்டைகள் உடைந்து சேதம் அடைந்தன.
தலைவாசல்:
நாமக்கல்லில் இருந்து முட்டை பாரம் ஏற்றிக்கொண்டு வேன் ஒன்று சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது. நேற்று விடியற்காலை 4 மணிக்கு தலைவாசலை அடுத்த மணிவிழுந்தான் தனியார் நூல்மில் எதிரில் பின்னால் வந்த லாரி மோதி வேனில் இருந்த 60 ஆயிரம் முட்டைகள் உடைந்து சேதமானது. இதன் மதிப்பு ரூ.3½ லட்சம் என கூறப்படுகிறது. இதுகுறித்து தலைவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire