லாரிகள் மோதி விபத்து; 2 டிரைவர்கள் படுகாயம்


லாரிகள் மோதி விபத்து; 2 டிரைவர்கள் படுகாயம்
x
தினத்தந்தி 25 Sept 2022 12:15 AM IST (Updated: 25 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தொப்பூர் கணவாயில் லாரிகள் மோதிய விபத்தில் 2 டிரைவர் படுகாயம் அடைந்தனர்.

தர்மபுரி

நல்லம்பள்ளி:

ஆந்திராவில் இருந்து டைல்ஸ் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி திருப்பூருக்கு புறப்பட்டது. இந்த லாரியை தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த டிரைவர் காசிராம் (வயது 30) என்பவர் ஓட்டி வந்தார். அவருடன் மாற்று டிரைவராக அதே மாவட்டத்தை சேர்ந்த தென்னரசு (37) வந்தார். இந்த லாரி தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் கட்டமேடு அருகே நேற்று வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் டைல்ஸ் லாரி டிரைவர் காசிராம் மாற்று டிரைவர் தென்னரசு ஆகியோர் படுகாயமடைந்தனர். இதில் காசிராமுக்கு கால் முறிவு ஏற்பட்டது.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தொப்பூர் போலீசார் மற்றும் சுங்கச்சாவடி ரோந்து படையினர் விரைந்து வந்து டிரைவர்கள் 2 பேரையும் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பின்னர் போலீசார் விபத்துக்குள்ளான 2 லாரிகளையும் பொக்லைன் எந்திரம் மூலம் அப்புறப்படுத்தினர். இந்த விபத்து காரணமாக தொப்பூர் கணவாயில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story