தனியார் பஸ் மீது லாரி மோதல்


தனியார் பஸ் மீது லாரி மோதல்
x

வந்தவாசி அருகே பயணிகள் இறங்குவதற்காக சாலையோரம் நின்றிருந்த தனியார் பஸ் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. அதில் டிரைவர்கள் உள்பட 8 பேர் படுகாயம் அடைந்தனர்.

திருவண்ணாமலை

வந்தவாசி

வந்தவாசி அருகே பயணிகள் இறங்குவதற்காக சாலையோரம் நின்றிருந்த தனியார் பஸ் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. அதில் டிரைவர்கள் உள்பட 8 பேர் படுகாயம் அடைந்தனர்.

சாலையோரம் நின்ற பஸ்

திருவண்ணாமலையில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு ஒரு தனியார் பஸ் வந்தவாசியை நோக்கி வந்து கொண்டு இருந்தது. அந்தப் பஸ்சை தேவிகாபுரத்தைச் சேர்ந்த ஏழுமலையின் மகனும் டிரைவருமான மணிகண்டன் (வயது 38) என்பவர் ஓட்டினார்.

பஸ்சில் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் அமர்ந்திருந்தனர்.

வந்தவாசிைய அடுத்த வல்லம் கூட்டுச்சாலை நிறுத்தத்தில் சாலை யோரம் பஸ் நிறுத்தப்பட்டு, பஸ்சில் இருந்து பயணிகள் சிலர் கீழே இறங்கி கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்தவாசியில் இருந்து சேத்துப்பட்டை நோக்கி வந்த ஒரு லாரி திடீரென சாலையோரம் நின்றிருந்த தனியார் பஸ் மீது மோதியது. அதில் லாரி மற்றும் பஸ்சின் முன்பக்கம் சேதம் அடைந்தது.

8 ேபர் படுகாயம்

பஸ் டிரைவர் மணிகண்டன், மருதாடு கிராமத்தைச் சேர்ந்த அண்ணாமலையின் மகனும் லாரி டிரைவருமான அருண் (26) மற்றும் பஸ்சில் பயணம் செய்த பயணிகளில் 6 பேர் என மொத்தம் 8 பேர் படுகாயம் அடைந்தனர். மேலும் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் வடவணக்கம்பாடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story