தடுப்புச் சுவர்மீது லாரி மோதி விபத்து


தடுப்புச் சுவர்மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது.

வேலூர்

கே.வி.குப்பம் பகுதியில் குடியாத்தம் காட்பாடி தேசிய நெடுஞ்சாலையில் சென்னை நோக்கி சென்ற லாரி, சாலையில் ஒருவழிப்பாதைக்காக அமைக்கப்பட்டுள்ள தடுப்பு சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பள்ளிகொண்டாவை சேர்ந்த லாரி கிளீனர் சரவணன் (வயது 40) என்பவர் லாரியில் இருந்து கீழே விழுந்து காயமடைந்தார். அவர் சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். லாரியை ஓட்டிவந்த வேலூர் அடுத்த பொய்கையைச் சேர்ந்த டிரைவர் சிவகுமார் (42) காயமின்றி தப்பினார்.


Next Story